வாணியம்பாடியில் ஊராட்சி நிருவாகத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்

வாணியம்பாடியில் ஊராட்சி நிருவாகத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
வாணியம்பாடியில் ஊராட்சி நிருவாகத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஊராட்சி நிருவாகத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் வாணியம்பாடி அருகே 3 ஆண்டுகளாக சாலை அமைக்ககோரி மனு அளித்தும் குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்காமல் தனிநபர் வீட்டிற்கு மட்டும் சாலை அமைத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மல்லங்குப்பம் ஊராட்சிக்குட்டபட்ட புதிய காலணி பகுதியில் புதியதாக சாலை, மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்ககோரியும், கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மல்லங்குப்பம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரிடம் மனு அளித்தும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் புதிய காலணி பகுதி மக்களுக்கு, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல், அதே ஊராட்சியை சேர்ந்த தனிநபருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தினர் 1 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில், சிமென்ட் சாலை அமைத்துள்ளனர், இந்நிலையில் 3 ஆண்டுகாலமாக சாலை அமைக்க மனு அளித்தும் சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தனிநபருக்கு சாலை அமைத்ததை கண்டித்து, புதிய காலணி பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களின் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, 2 மாதங்களில் புதிய காலணி பகுதியிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துச்சென்றனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
Next Story