பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை சரிவு.
Paramathi Velur King 24x7 |22 July 2024 12:59 PM GMT
பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை சரிவடைந்துள்ளது.
பரமத்திவேலூர், ஜூலை:23- பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் வரை சரிவடைந்து ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு விலை சரிவடைந்து உள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story