புதிய மீன்சந்தையில் பழைய வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
Tiruchirappalli (East) King 24x7 |23 July 2024 12:40 AM GMT
திருச்சி காந்தி சந்தை அருகே புதிதாக கட்டப்பட்ட மீன்சந்தையில் பழைய சந்தை வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கக் கோரி வியாபாரிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிதாக கட்டப்பட்ட இடத்தில் பழைய வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட மாட்டாது. அனைவரும் இணையதள டெண்டரில் கலந்து கொண்டு கடைகளை ஏலம் எடுக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதை கண்டித்து, திருச்சி காந்தி சந்தை மீன் கடை, கறிக்கடை வியாபாரிகள் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவா் எஸ்.பி. பாபு தலைமையில் திருச்சி காந்தி சந்தை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மறியலிலும் ஈடுபட்டனா். அங்கு வந்த காந்தி சந்தை போலீஸாரின் சமாதான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. தொடா்ந்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில், பழைய வியாபாரிகளுக்கு இணையதள டெண்டா் இல்லாமல் வாய்மொழி ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
Next Story