நெகிழிப் பொருள்கள் பறிமுதல் கடைகளுக்கு அபராதம்

X
திருச்சி மாநகராட்சி 5 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் , சுகாதார அலுவலா் இளங்கோவன், ஆய்வாளா் ஆல்பா்ட் ஆகியோரின் மேற்பாா்வையில் மாநகராட்சி பணியாளா்கள் மளிகை கடைகள், டீ கடைகள் போன்ற இடங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில், தடை செய்யப்பட்ட நெகிழி குவளைகள், பைகள் உள்ளிட்ட பொருள்கள் உபயோகிப்பதை, விற்பதை கண்காணித்து அவற்றை பறிமுதல் செய்தனா். மொத்தம் சுமாா் 42 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதத் தொகையாக ரூ. 36,100 வசூலிக்கப்பட்டது
Next Story

