நெல் விதைப்பிற்காக விவசாயிகள் அடி உரமான எருக்கஞ்செடிகளை சேகரிக்கும் பணி
Sivagangai King 24x7 |23 July 2024 1:10 AM GMT
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் ஆடிப்பட்ட நெல் விதைப்பிற்காக விவசாயிகள் அடி உரமான எருக்கஞ்செடிகளை சேகரிக்கும் பணியும் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் ஆடிப்பட்ட நெல் விதைப்பிற்காக விவசாயிகள் அடி உரமான எருக்கஞ்செடிகளை சேகரிக்கும் பணியும் ஈடுபட்டு வருகின்றனர். சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள், ஆடி மாதத்தில் நெல் விதைப்பில் ஈடுபடுவர். தற்போது ஆடி மாதம் தொடங்கியதையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது, விவசாய பணிக்கு தயார்படுத்தும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நாச்சாங்கால் போடுவதற்கு முன்பு, இயற்கை உரமாக எருக்கஞ்செடிகளை வயலில் பரப்பி, தண்ணீருடன் உழும் அது இயற்கை உரமாகவும் பூச்சி விரட்டியாகவும் பயன்படுவதால் தற்போது எருக்கஞ்செடிகளை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில்: மண்வளம் காப்பதற்கு இயற்கை உரமாக எருக்கஞ்செடி பயன்படுத்தப்படுகிறது.பல இடங்களில், தென்னை மற்றும் மாமரங்கள் வளர்ப்பில் முக்கிய மண் வளம் காக்கும் உரமாக எருக்கஞ்செடி பயன்படுகிறது. தவிர நாற்றங்கால் போடுவதற்கு முன்பு எருக்கஞ் செடிகளை பயன்களில் போடும் போது அது இயற்கை உரமாகவும் பூச்சி விரட்டியாகும் பயன்படுகிறது. இயற்கை விவசாயிகள் பெருமளவில் இதனை பயன்படுத்துகின்றனர்.
Next Story