ராமநாதபுரம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
வாகன காப்பகத்தில் அடாவடி வசூல் செய்வதாக புகார் முறைப்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
ராமநாதபுரம் வாகன காப்பகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 24 மணி நேரத்துக்கு கட்டணமாக பத்து ரூபாய் வாடகை என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என அடாபடியாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் வாகன காப்பகத்தில் 12 மணி நேரத்துக்கு மட்டும் பத்து ரூபாய் என அடாவடியாக வசூல் செய்வதால், பயணிகள் வரும் இரு சக்கர வாகனங்களை வெளியே நிறுத்த வேண்டிய அவலநிலையில் உள்ளனர். இதுகுறித்து இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் புகார் மனு அளித்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டுமென ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இயங்கி வந்த பேருந்து நிலையம் பொதுமக்கள் நலன் கருதி விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்காலிக ஏற்பாடாக தற்போது ராமநாதபுரம் ரயில் நிலையம் எதிரே உள்ள பழைய பேருந்து நிலையம் தற்காலிக பேருந்து நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் பயன்பாட்டுகாக இருசக்கர வாகன காப்பக நிலையம் செயல்பட்டு வருகிறது.ராமநாதபுரத்தில் இருந்து வெளியூர் செல்லும் போது மக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்திச் செல்கின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணமாக தலா ரூபாய் 10 வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் ரசீதில் ஒரு நாள் என்பது இரவு 12 மணி நேரம் வரை மட்டுமே என அச்சிடப்பட்டு அடாவடியாக ஒரு நாளைக்கு 20 ரூபாய் என வசூல் செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் தங்களின் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும், அந்த வாகன காப்பகத்தில் போதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு எதுவும் இல்லாமல் காணப்படுகிறது. அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு நிழல் கூரை எதுவும் அமைக்கப்படாமல் வெட்ட வெளியில் நிறுத்தப்படுவதால் மழை வெயில் காலங்களில் வாகனம் சேதமடைகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நடைபெற்ற ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் 'சிம்ரன் ஜீத் சிங் கோலோனுக்கு' கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story