குடிசை மாற்று வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து விரைந்து வீடு கட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தரர்களிடம் கேட்டுக் கொண்டார்

குடிசை மாற்று வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து விரைந்து வீடு கட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தரர்களிடம் கேட்டுக் கொண்டார்
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து வறுமை கோட்டுக்கு கீழே உள்ள நபர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் படி ஆங்காங்கே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது இதில் மாநில அரசு நிதி பெரும் அளவு கொடுத்துள்ளது கடந்த 2019 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வருகூராம்பட்டி பட்டேல் நகர் பகுதியில் சுமார் 845 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதற்கான தொகை ஒரு லட்சத்து ஐயாயிரம் என நிர்ணயித்து இருந்தது அதன் பின்னர் சுமார் 300 பேர் மட்டுமே ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கட்டியிருந்த நிலையில் திட்டத்திற்கு கூடுதல் செலவு ஆனதாக கூறி மேலும் 33 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது இந்த 33 ஆயிரம் ரூபாய் பலரும் கட்ட முடியாத சூழல் நிலவியதால் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா அவர்களுக்கு கடன் வழங்கவும் ஏற்பாடு செய்த இந்த நிலையில் முழு தொகை கட்டிய பின்பும் பயனாளிகள் குடியிருக்க அடுக்குமாடி குடியிருப்பு வரவில்லை ஏனென்றால் மின்சார வசதி கழிவுநீர் வெளியேற்றும் வசதி போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் நிலுவையில் இருந்ததால் அங்கு பயனாளிகள் யாரும் குடி புகவில்லை இதனை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா அவர்களும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பணிகள் முடிவடையாமல் இருந்ததை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்பந்ததாரர்களிடம் கடிந்து கொண்டார்.ஏன் இன்னும் பணிகள் முடியாமல் உள்ளன என கேள்வி எழுப்பினர் அதற்கு மின்சார கட்டணம் மற்றும் வைப்புத் தொகைகள் அதிகமாகி விட்டதால் மீண்டும் பயனாளிகளிடம் தொகையை உயர்த்தி வாங்க வேண்டும் என்று கூறினார். குடிசைப் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் பல்வேறு காரணங்களை கூறி 2019 முதல் தற்போது வரை திட்டத்தை முடிக்காமல் தாமதமாகி வருகிறது இதற்கு தொகை செலுத்திய பொதுமக்கள் புதிய இடத்திற்கு குடிபுக முடியாமலும் பழைய இடத்தை விட்டு வர முடியாமலும் தவிர்த்து வருகிறார்கள் எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் மேலும் இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Next Story