புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!

புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!
அரசியல் செய்திகள்
நீட் குளறுபடியால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் இதற்கு முழுவதுமாக நீட்டை கொண்டு வந்த திமுக காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உடனடியாக நிரந்தர தீர்வு தர வேண்டும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது உடனடியாக தமிழக அரசும் சுகாதார துறையும் எவ்வளவு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.... மின் கட்டண உயர்வு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் தமிழக அரசுக்கு எதிராகவும் மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் தற்போது மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுக அரசு udai மின் திட்டத்தில் கையொப்பம் இட்டதால் தான் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக வீணாக பழி சுமத்துகிறது அதிமுக அந்த மின் திட்டத்தில் கையொப்பம் இடுவதற்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தது அதை நிறைவேற்றிய பின்னர் தான் அதிமுக அரசு இந்த திட்டத்தில் கையொப்பமிட்டது அதை மறைத்துவிட்டு தற்போது திமுக அதிமுக அரசை குறை கூறுகிறது திருநற்ற அரசாக திமுக இருப்பதால் மின் கட்டண உயர்வு தற்போது ஏற்பட்டுள்ளது மின் கட்டண உயர்வு குறித்தும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறையும் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் வாய் திறக்கவில்லை குறிப்பாக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வாய் மூடி மௌனியாக உள்ளன அதிமுக மட்டுமே திமுக அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தின் போது வைரஸ் காய்ச்சல்கள் அதிகரித்து காணப்படும் அதுவும் நிபா வைரஸ் போன்ற காய்ச்சல்கள் அதிக அளவு வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளன ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்திலும் நான் சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது இதுபோன்ற காய்ச்சல்கள் வந்துள்ளது அப்போது உடனடியாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது விளைவாக இந்த பாதிப்பு தமிழகத்தில் ஏற்படவில்லை தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது நிபா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தல் தமிழக அரசின் சுகாதார துறையும் உடனடியாக விழித்துக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் குறிப்பாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படுகிறது வெளிப்படையாக தமிழக அரசு எவ்வளவு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்க வேண்டும் இதுவரை இது அறிவிக்கப்படாது வேதனைக்குரியதாக உ ள்ளது ஜெயலலிதா காலத்திலிருந்து இன்று வரை நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது நீட் வேண்டாம் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு நீட் வேண்டாம் என்று கூறியது அண்ணா திமுக நீட் வேண்டும் என்று கூறி அந்த திட்டத்தை இந்தியாவில் குல் கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக அரசு தற்போது காங்கிரஸ் திமுக ஆகியவை நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது இது வேதனைக்குரியது இந்த விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடிக்கிறது திமுக நீட் குளறுபடிகள் காரணமாக இந்தியா முழுக்க தற்போது மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் இதற்கு காங்கிரஸ் திமுக தான் பொறுப்பேற்க வேண்டும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பது என்பது முற்றிலுமாக களையப்பட வேண்டும் இந்த விவகாரத்தில் உடனடியாக உச்ச நீதிமன்றம் நிரந்தர தீர்வை தர வேண்டும்
Next Story