சித்தாமூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இயற்கை வேளாண்மை குறித்து மகளிர்களுக்கு இலவச பயிற்சி ஏராளமானோர் பங்கேற்பு

சித்தாமூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இயற்கை வேளாண்மை குறித்து மகளிர்களுக்கு இலவச பயிற்சி
சித்தாமூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் இயற்கை வேளாண்மை குறித்து மகளிர்களுக்கு இலவச பயிற்சி செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில் லத்தூர், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள இயற்கை வேளாண்மை மகளிர்களுக்கு தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் இயற்கை விவசாய பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் இயற்கை விவசாயி பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு மண்வளத்தை பாதுகாப்பது குறித்தும், இயற்கை உரம் மேலாண்மை குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும், விவசாயத்தில் நோய் கட்டுப்பாடு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து கடைசி நாளான இன்று பஞ்சகாவியம் தயாரித்தல், மீன் அமிலம் தயாரித்தல், பூச்சி விரட்டி ஐந்து இலை கரைசல் செய்வது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மூன்று குழுக்களாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story