சோளிங்கர் அருகே நீரில் மூழ்கி நான்கு வயது சிறுமி உயிரிழப்பு - சோகத்தில் பெற்றோர்கள்

சோளிங்கர் அருகே நீரில் மூழ்கி நான்கு வயது சிறுமி உயிரிழப்பு - சோகத்தில் பெற்றோர்கள்
நீரில் மூழ்கி சிறுமி பலி
100 நாள் வேலைக்கு தாயுடன் சென்ற 4வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் தாளிக்கால் கிராமம் பணவட்டாம்பாடி கிராமம் பாடசாலைத்தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம் (32), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மோனிஷா  (28), நூறு நாள் வேலை திட்ட பணியாளர்.  தம்பதியர் மகள் பிரியங்கா (4).  மோனிஷா தனது மகளை அழைத்துக்கொண்டு நூறு நாள்வேலைக்காக பணவட்டாம்பாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரைக்கு அருகே சென்றுள்ளார். அங்கு மற்ற பணியாளர்களுடன்  சேர்ந்து மோனிஷா நூறுநாள் பணியில் ஈடுபட்டார். மோனிஷாக தனது மகளை ஏரிக்கரை பகுதியில் மரத்தின் கீழே,  வேலை முடித்து வரும் வரை அமர்ந்துக்கும்படி கூறிவிட்டுச்சென்றார். சிறிது நேரத்தில் பிரியங்கா ஏரியின்  அருகில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் தவறி பிரியங்காக விழுந்துள்ளார்.  சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
Next Story