ஒன்றிய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு திட்டம் இல்லை என்பதை விட ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை எம் எல் ஏ ஈஸ்வரன் அறிக்கை

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு திட்டம் இல்லை என்பதை விட ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை எம் எல் ஏ ஈஸ்வரன் அறிக்கை
ஒன்றிய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு திட்டம் இல்லை என்பதை விட ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை எம் எல் ஏ ஈஸ்வரன் அறிக்கை
மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை விவசாயிகள், சிறு தொழில்கள், சாமானியர்கள் என்று எந்த சாராருக்கும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டை முழுமையாக புறக்கணித்திருக்கிறது. இது இந்தியாவிற்கான பட்ஜெட்டா அல்லது ஆந்திராவுக்கும், பிகாருக்குமான பட்ஜெட்டா என்று கேட்கும் அளவிற்கு அரசியல் பட்ஜெட்டாக ஆட்சியை தாங்கி பிடிக்கின்ற கூட்டணி கட்சிகளுக்கான பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மக்கள் எதிர்பார்த்த எந்த ஒரு விஷயத்திற்கும் மாண்புமிகு நிதியமைச்சர் பதில் சொல்லவில்லை. ஜிஎஸ்டி வரி தீவிரவாதத்தாலும் அந்தத் துறையின் சார்பாக தொழிற்சாலைகளுக்கும், வியாபாரிகளுக்கும் கொடுக்கப்படுகிற தொந்தரவுகளுக்கு எந்த விதமான தீர்வும் காணப்படவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் போல ஒரு வரி அறிவிப்புகளாக பல்வேறு விஷயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் எப்படி செயல்படுத்த போகின்றோம் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை. நடுத்தர மக்களுக்கு வருமான வரியில் எந்த சலுகையும் இல்லை ஆனால் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வரிசலுகை 5% கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த வருவாயான 32 லட்சம் கோடியில் 12 லட்சம் கோடி வாங்கிய கடனுக்கான வட்டி என்பது பயமுறுத்துகிறது. மூலதன செலவு 11 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகபட்சமாக ஆந்திராவுக்கும், பீகாருக்கும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மக்களை ஏமாற்றியிருக்கிறது.
Next Story