மகனூர்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் பங்கேற்பு
Krishnagiri King 24x7 |23 July 2024 2:00 PM GMT
மகனூர்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் பங்கேற்பு
ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட மகனூர்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட மகனூர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மகனூர்பட்டி,எக்கூர்,கோவிந்தாபுரம், பெரிய தள்ளாடி,கீழ்மத்தூர் போன்ற ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கப்பட்டது, இந்த முகாமில் புதிய மின் இணைப்பு,மின் கட்டணம் மாற்றங்கள்,மின் இணைப்பு பெயர் மாற்றங்கள், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் , வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு இணைய வழி பட்டா நில அளவீடு வாரிசு சான்றிதழ் சாதி சான்றிதழ் போன்ற சேவைகள் மனு வழங்கி முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என இந்த மக்கள் குறைதீர் முகாமில் கூறப்படுகிறது, இந்த முகாமில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உஷாராணி குமரேசன் முகாமை துவக்கி வைத்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி,பாலாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கே ஜி மணிகண்டன், கலீல்,ஈஸ்வரி ஜெயராமன், பழனியம்மாள் பெருமாள், ராஜாமணி அருணகிரி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜப்பன்,உதவி பொறியாளர் திருமதி பிரேமாவதி,மகளிர் ஊர் நல அலுவலர் காந்திமதி மற்றும் மின்சார துறை,சுகாதாரத்துறை, வருவாய் துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் திராவிட முன்னேற்றக் கழக சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் நல அணி அமைப்பாளர் சத்தியநாரயணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளார் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்தனர்,
Next Story