திருப்பூரில் பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு!

திருப்பூரில் பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு அளித்தனர்.
மிரட்டுவதாக பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபோலீஸ் கமிஷனர்அலுவலகத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் மனு! திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில குழு உறுப்பினர் எஸ் ராஜா தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது அகில இந்திய பொது செயலாளர் தேவராஜ் கடந்த 16ஆம் தேதி திருப்பூருக்கு வருவதை அறிந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில குழு உறுப்பினர்கள் சுமார் 100 வாகனங்களில் திருப்பூர் வந்தனர். ஆனால் போலீசார் எங்களை கோவில்வழி அருகே தடுத்து நிறுத்தினர். அப்போது எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் நாங்கள் கட்சியில் இருந்து நீக்கிய கர்ணன் நடத்திய கூட்டத்திற்கு நாங்கள் செல்லவில்லை என்றும், பேசிய பொதுச் செயலாளர் தேவராஜனை சந்திக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தும் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அப்போது மாநில நிர்வாகிகள் கர்ணன் மீது புகார் மனு போலீசாரிடம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுரையை ஏற்று நாங்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் மாநில மாநில குழுவால் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கர்ணன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய பொதுச்செயலாளர் தேவராஜனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினோம். இந்நிலையில் கர்ணன் நாங்கள் ரவுடித்தனம் செய்வதாகவும், மிரட்டுவதாகவும் எங்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார். நாங்கள் எந்தவித ரவுடித்தனமும் செய்யவில்லை. கட்சியை நல்வழியில் நடத்தி வருகிறோம். எனவே எங்கள் மீது பொய் புகார் கொடுத்த கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
Next Story