ஆத்தூர் : நரசிங்கபுரம் நகராட்சி குப்பை கொண்டு செல்லும் டாடா ஏஸ் வாகனம் டீசல் இல்லாமல் பெண் தூய்மை பணியாளர் வாகனத்தை தள்ளும் காட்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று சேகரிக்கும் குப்பைகளை டாடா ஏஸ் வாகனத்தில் எடுத்து வருகின்றனர், இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் டாடா ஏஸ் வாகனத்தை துப்புரவு பணியாளர் ஓட்டிச் சென்றார் அப்போது சேலம் கடலூர் சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு சென்றுகொண்டிருந்த போது டீசல் இல்லாமல் சாலையிலேயே திடீரென நின்றுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மேலும் நகராட்சி பெண் ஊழியர், அப்பகுதியில் உள்ள ஒருவர் டாடா ஏஸ் வாகனத்தை கரகாட்டக்காரன் சினிமா படப்பாடியில் தள்ளிச்சென்று ஓரமாக நிறுத்தினர் ,
Next Story




