கலாநிதி மாறன் உருவத்தை நூதன முறையில் வரைந்த ஓவிய ஆசிரியர்

கலாநிதி மாறன் உருவத்தை நூதன முறையில் வரைந்த ஓவிய ஆசிரியர்
ஆசிரியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக.. சன் குழுமம் என்பதை குறிக்கும் வகையில் "சன் டைரக்ட் ஆண்டெனாவலேயே" சன் குழும தலைவர் கலாநிதி மாறன் படத்தை பகுதிநேர ஓவியா ஆசிரியர் செல்வம் வரைந்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இல்லத்திரையில் நுழைந்திருக்கும் சன் தொலைக்காட்சியை உருவாக்கியவர் கலாநிதி மாறன் ஆவார். கலாநிதி மாறன் தந்தை முரசொலி மாறன் அவர்கள் தமிழக அரசியலில் பிரிக்க முடியாத மாபெரும் தலைவர்களில் ஒருவர். கலாநிதி மாறன் தன் உழைப்பாலும், மாறுபட்ட சிந்தனையாலும், இன்னும் பல சோதனைகளை கடந்தே சிகரத்தை தொட்ட மாமனிதர் ஆவார், அவர் மனதில் தொலைக்காட்சி சேனல் தொடங்குவது குறித்து எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. தன் சேமிப்பை முழுவதையும் வங்கி கடனும் கொண்டு சன் தொலைக்காட்சியை 1993 ஆம் ஆண்டில் தொடங்கினார். இந்தியா தொலைக்காட்சியில் முதல் முறையாக... என்பதே சன் தொலைக்காட்சியின் பிராண்டாகவே மாறியது அதன் பின்னர், சன் தொலைக்காட்சி விஸ்வரூபம் எடுத்து சன் குழுமமாக மாறி, வீறுநடை போடுவதையும் ஊரறியும். சன் குழும தலைவர் கலாநிதி மாறன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சன் குழுமம் என்பதை குறிக்கும் விதமாக சன் டைரக்ட் ஆண்டெனாவில் மார்க்கர் வைத்து "ஆண்டெனாவலேயே" சன் குழும தலைவர் கலாநிதி மாறன் படத்தை ஐந்து நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் சன் டிவி கலாநிதி மாறன் படத்தை சன் என்பது குறிக்கும் வகையில் "சன் டைரக்ட் ஆன்டெனாவலேயே" வரைந்தது சூப்பர் என்று பாராட்டினார்கள்.
Next Story