பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படுமா?
Pudukkottai King 24x7 |24 July 2024 4:56 AM GMT
பொதுப் பிரச்சினைகள்
ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் ஆங் காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியு மாக காணப்படுவதால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பெண்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வரு கின்றனர். பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்லும் நிலை உள்ளது. மழை நேரத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. வெயில் நேரத்தில் தூசிப்படலத்தால் பொதுமக்கள், அப்ப குதி வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சிதிலமடைந்த சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் "என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story