வேட்டைக்கு செல்வதற்காக நாட்டு துப்பாக்கியை வெல்டு வைத்த போது நேர்ந்த பரிதாபம்!

துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேப்ப வயல் கிராமத்தில் நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு 4 இளைஞர்கள் வேட்டைக்கு செல்வதாக முடிவு செய்துள்ளனர் இதனை அடுத்து நாட்டு துப்பாக்கியின் துளை சிறியதாக உள்ளது அதை பெரிது படுத்த வேண்டும் என்று இளைஞர்களே முடிவு செய்து வெல்டு வைத்துள்ளனர் வெல்டு வைக்கும் போது துளை பெரிதாகி பழனிச்சாமி ஆராய் தம்பதியின் மகன் லட்சுமணன் (18) அந்த இளைஞன் வயிற்றில் குண்டு பாய்ந்து உள்ளது இதனை அடுத்து அந்த இளைஞனை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்க்க இயலாத காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞனை அனுமதித்த போது அந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்ட தெரிவித்ததை அடுத்து அந்த இளைஞன் உடற்கு ஆய்வானது திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது லட்சுமணன் சரவணன் மற்றும் தேக்கு மலை ஆகிய மூன்று இளைஞர்கள் பெயர் விவரம் தெரியவந்துள்ளது தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பான்டே தலைமையிலான காவல்துறையினர் இவர்களது துப்பாக்கி அனுமதி பெற்று வைத்துள்ளார்களா? எவ்வாறு துப்பாக்கி இவர்களது கையில் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன விசாரணை முடிந்த பின்பு தான் மற்றொரு இளைஞர்கள் யார் யார் என்பது குறித்து தெரியவரும் வயிற்றில் 37 பால்ரசு குண்டுகள் உள்ளதாக மருத்துவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதும் நமக்கு தற்போது தகவலாக வந்துள்ளது.
Next Story