அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

போராட்டச் செய்திகள்போராட்டச் செய்திகள்
ஊதிய உயர்வை உயர்த்தக் கோரியும், நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரியும் திமுக அரசை கண்டித்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகே உள்ள பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும்,பல்கலைக்கழக மாநில குழு பரிந்துரை மற்றும் உயர்நீதிமன்ற ஆணையின்படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரியும், நீண்டகாலமாக கல்வித் தகுதியோடு பணிபுரிந்து கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் அவர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் கல்லூரி வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.தங்களது கோரிக்கைகளை திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றால் இன்னும் பல கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story