வீட்டில் எரிந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

X
கோவை:கருமத்தம்பட்டி சென்னப்பசெட்டிபுதூர் பகுதியில் உள்ள சகாய ஜெகன்ராஜ் என்பவரது வீட்டிலிருந்து புகை வருவதாக அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலை தொடர்ந்து தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த வீட்டில் வசித்து வரும் சகாய ஜெகன்ராஜ் (37) வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.போலீசாரின் விசாரணையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் உடன் இருந்த மனைவி வெளியே சென்றபோது வீட்டின் சமயலறையில் தீப்பிடித்ததை உறுதி செய்த கருமத்தம்பட்டி போலீசார் தீ விபத்திற்க்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

