திருப்பத்தூர் அருகே நிலத்தகராறில்மூதாட்டிக்கு கொலைவெறி தாக்குதல்!
Tirupathur King 24x7 |24 July 2024 7:02 AM GMT
திருப்பத்தூர் அருகே நிலத்தகராறில்மூதாட்டிக்கு கொலைவெறி தாக்குதல் அரசுமருத்துவமனையில் அனுமதி! போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிலத்தகராறில்மூதாட்டிக்கு கொலைவெறி தாக்குதல் அரசுமருத்துவமனையில் அனுமதி! போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புது பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ராணியம்மாள் (79), சங்கரன் மனைவி ராஜேஸ்வரி (69), கோவிந்தராஜ் மனைவி பவுனம்மாள் (60) இவர்களுக்கும், இவர்களது உறவினரான அதே பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ராமலிங்கம் (60) என்பவருக்கும் கடந்த மூன்று வருடமாக நிலத்தில் வழி சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இது குறித்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராணி அம்மாள் என்பவரின் மகன் ஜெயக்குமார் இவரது மகன்களுடன் பால் வாங்க இவர்களது வீட்டின் அருகே உள்ள நிலத்தின் வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ராமலிங்கம் ஏன் என்னுடைய நிலத்து வழியில் வருகிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இவரது தாய் ராணியம்மாள் மற்றும் இவரது சகோதரிகள் ராஜேஸ்வரி, பவுனம்மாள் ஆகியோர் திமுக கவுன்சிலர் ராமலிங்கத்திடம் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம் மற்றும் இவரது மகன்கள் சேர்ந்து மூதாட்டி மூன்று பேரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் ராணியம்மாள், ராஜேஸ்வரி, பவுனம்மாள் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தகராறில் மூதாட்டியின் உறவினர்கள் மூன்று பேரையும் சரமாரியாக தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story