ஆத்தூர்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Attur King 24x7 |24 July 2024 7:27 AM GMT
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மக்களுடன் முதல்வர் முகாம். பொதுமக்கள் ஆர்வமுடன் பொதுமக்கள் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் கொத்தாம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் மக்களின் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டாக்டர்: பத்மினி பிரியதர்ஷினி, வட்டாட்சியர் உள்ளிட்டோர் துவக்கி வைத்து நடைபெற்ற நிலையில் மின்சார வாரியம்,நகராட்சி நிர்வாகம்,மற்றும் குடிநீர் வளங்கள், துறை ஊரக வளர்ச்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட 13 துறை சார்ந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்ட ஸ்டால்களில் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் குறை கேட்க முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் மனுக்களை வழங்கினார்கள் .
Next Story