காமராஜ் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!
Thoothukudi King 24x7 |24 July 2024 8:10 AM GMT
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை எதிர்த்து போராடிய இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் கல்லூரியில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி முன்பு நீக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து இவர்களிடம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது தொடர்ந்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு கல்லூரிக்கு திரும்பினர் ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சந்தன செல்வம், நேசமணி ,அலெக்சாண்டர் ஆகிய மூன்று மாணவர்களை கல்லூரி நிர்வாகம் நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிட்டது இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களான நேசமணி மற்றும் சந்தன செல்வம் ஆகியோர் கல்லூரி முன்பு இன்று இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறை தலையிட்டு தங்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக கல்லூரி முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்
Next Story