குடிபோதையில் பணிக்கு வந்த சிறை தலைமை வார்டன் டிஸ்மிஸ்
Salem (west) King 24x7 |24 July 2024 9:34 AM GMT
சேலம் கண்காணிப்பாளர் நடவடிக்கை
குடிபோதையில் பணிக்கு வந்த அரூர் கிளைச்சிறை முதல் தலைமை காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் கிளைச்சிறையில் முதல் தலைமை காவலராக பணியாற்றியவர் அசோக்குமார் (48). குடி பழக்கம் கொண்ட இவர் வேலைக்கு வரும்போது மதுகுடித்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் போதையில் பணியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து மது போதையில் பணிக்கு வந்ததையடுத்து இவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கோவை சிறை அலுவலர் சிவராமன் விசாரணை நடத்தி சேலம் மத்திய சிறைகண்காணிப்பாளருக்கு அறிக்கை கொடுத்தார். இதையடுத்து முதல் தலைமை காவலர் (தலைமை வார்டன்) அசோக்குமாரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார். இது சிறை வார்டன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story