ரெட்டிப்பட்டி, கந்தம்பட்டி பகுதியில் குடிநீர் குழாய், மின்மோட்டார் அமைக்கும் பணி
Salem (west) King 24x7 |24 July 2024 9:36 AM GMT
அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலம் மாநகராட்சி 1-வது கோட்டம் ரெட்டிப்பட்டியில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தில் கிணற்றுக்கு தொட்டி, மின்மோட்டார் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அருள் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் ரூ.5 லட்சத்தில் 24-வது கோட்டம் கந்தம்பட்டி கிழக்கு ஆதிதிராவிடர் காலனியில் இல்லம் தேடி எம்.எல்.ஏ. நிகழ்ச்சியில் பொதுமக்கள் மயான எரிமேடை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுடுகாட்டுக்கு மயான எரிமேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஈஸ்வரன், பகுதி தலைவர் சுரேஷ்குமார், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 20-வது கோட்டம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மழைக்காலங்களில் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகுவதால் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அருள் எம்.எல்.ஏ. தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி செயற்பொறியாளர் முருகனும் சென்றார். அப்போது, ரூ.7 கோடியில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கூறினார். அவரிடம், விரைவில் பணிகளை தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அருள் எம்.எல்.ஏ. கூறினார்.
Next Story