ராஜகோபுரம் கட்டும் பணியை காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்த முதல்வர்

ராஜகோபுரம் கட்டும் பணியை காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்த முதல்வர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் சித்தாலந்தூர் கிராமம் அருள்மிகு அத்தனூர் அம்மன் திருக்கோவிலில் உபயதாரர்கள் நிதி உதவி உடன் இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடனும் கோவில் திருக்கோவில் முன்புறம்ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி மற்றும் கோவில் பிரகாரமண்டபம் கட்டும் பணி ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.கோவில் வளாகத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர்மதுரா செந்தில்திருச்செங்கோடு முன்னாள் நகர் மன்ற தலைவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி திருச்செங்கோடு ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் அட்மா தலைவர்மற்றோர் தங்கவேல்இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நரசிம்ம சாமி திருக்கோவில் உதவி ஆணையர் செயல் அலுவலர் இளையராஜா நாமக்கல் மாவட்ட உதவியாளர் சாமிநாதன் ஈரோடு மண்டல உதவி கோட்ட பொறியாளர் காளீஸ்வரி திருக்கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ் சரக ஆய்வாளர் நவீன் ராஜா மற்றும் செயல் அலுவலர்கள் பணியாளர்கள் திருக்கோவில் தர்மகர்த்தா துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சம்பூர்ணம் பொன்னுசாமிசித்தாலந்தூர் ஊராட்சி மன்றதலைவர் ஷோபா கிருஷ்ணமூர்த்தி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் நதி ராஜவேல்ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டு விழா நினைவு கல்வெட்டை திறந்து வைத்து பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது கொங்கு மண்டலம் ஒரு ஆன்மீக பூமி குலதெய்வ கோயில்களையும் குலதெய்வ வழிபாட்டையும் முன்னிறுத்துகிற பகுதி. இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதை போல் தமிழகத்தில் கொங்கு மண்டலம் சிறப்பானதொரு பகுதியாகும். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு தமிழக அரசு குடமுழுக்கு நடத்தியுள்ளது. திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளது. வருமானம் இல்லாத கோவில்களுக்கு அரசின் பங்கை கொண்டு ஒரு கால பூஜை அன்னதானம் என நடத்தி வருகிறது. பல்வேறு கோவில்களுக்கு புதிய தேர் அமைக்கும் பணியை செய்து வருகிறது. கடவுள் உண்டு என்று சொல்பவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் ஏனென்றால் மேலிருந்து ஒருவன் நம்மை கவனிக்கிறான் என்கிற அச்ச உணர்வில் அவர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள். பல்வேறு கோயில்களுக்கு இன்றைய நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கோவிலில் கம்பி வட ஊர்தி பணியை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திருச்செங்கோட்டில் கம்பி வட ஊர்தி அமைக்க வாய்ப்பு இல்லை என பொறியாளர்கள் தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு மாற்றுப்பாதை அமைக்க 18 லட்சம் ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. வையப்பமலையில் நாலரை கோடி நிதி மதிப்பீட்டில் புதிய மலைப்பாதை அமைக்கப்பட உள்ளது எனக் கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் ஊர் பிரமுகர் ராஜா அனைவருக்கும் நன்றி கூறினார்.
Next Story