ஆடிகிருத்திகை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

ஆடிகிருத்திகை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
கூட்டம்
ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக உள்ளூர், வெளியூர், மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கான பாதுகாப்பு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்தி கொடுப்பது சம்பந்தமாக பல்துறை அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டம் கோவிலின் உள்ள மண்டபத்தில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் தலைமையில் நடைபெற்றது.. இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் வட்டாட்சியர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து திருவிழா சம்பந்தமான பாதுகாப்பு பயணிகள் வசதிகளை குறித்து கோரிக்கைகள் வாசித்ததோடு போக்குவரத்துத்துறை, காவல்துறை, மின்சாரம், சுகாதாரம், தீயணைப்புத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story