மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Sivagangai King 24x7 |24 July 2024 2:14 PM GMT
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பாக, வட்டக்கிளைத் தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் பாண்டி, மாவட்ட இணைச் செயலாளர் பயாஸ் அகமது, சின்னப்பன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்கள் பாஸ்கரன், தனபால், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சதுரகிரி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபால், தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆட்சிப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த நாகராஜன், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story