வேளாண்மை துறையின் மூலம் எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம்
Komarapalayam King 24x7 |24 July 2024 2:24 PM GMT
குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை துறையின் மூலம் எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை துறையின் மூலம் எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி தலைமையில் நடந்தது. இதில் ஜெயமணி பேசியதாவது: கரும்பு மற்றும் நெல் பயிர்களுக்கு பதிலாக எள் பயிரினை மாற்று பயிராக பயிரிடலாம். மேலும் இப்பயிற்சியில் எள் பயிருக்கான விதையளவு, விதை நேர்த்தி செய்யும் முறை, தேவையான ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் எள் பயிரில் பரவலாக காணப்படும் காய், ஈயை கம்பு, நிலக்கடலை, பச்சப்பயிறு ஆகியவற்றை ஊடுபயிராக பயிரிட்டும், வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தும் கட்டுபடுத்தலாம். இப்பயிருக்கான நீரின் தேவையும் குறைவு. வேளாண்மைத் துறையின் மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். நுண்ணீர் பாசனம், கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள், மண் புழு வளர்ப்பு, பயிர் காப்பீடு, பிரதம மந்திரி கெளரவ நிதி பெறுவது, உழவன் செயலியில் தமிழ் மண் வளம், மானிய திட்டங்கள், பயிர் காப்பீடு விபரம், உழவன் அலுவலர் தொடர்பு திட்டம், பூச்சி, நோய் கண்காணிப்பு, பரிந்துரை, அட்மா பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கம், கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற 24 விருப்ப தேர்வுகள் உள்ளது. அதனை உபயோகிக்கும் முறைகள், நன்மைகள் குறித்து விவசாயிகள் பயிற்சி பெற வேண்டும். அட்மா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள், செயல்விளக்கங்கள், கண்டுணர் சுற்றுலாக்கள், பண்ணைப்பள்ளிகள் குறித்தும விவசாயிகள் நான்கு அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினாஒர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா மற்றும் அருண்குமார் ஆகியோர் துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா மற்றும் அருண்குமார்,உதவி வேளாண்மை அலுவலர் கிருபா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story