மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரிஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரிஅனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், தொழிற்சங்க சட்டம், விவசாய விளை பொருள்களுக்கு நியாயமான விலை வழங்கக் கோரியும், ஒன்றிய பட்ஜெட்டில் தொழிற்சங்க கோரிக்கைகள் இணைக்க வலியுறுத்தி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு, ஏஐடியுசி, எல். பி. எஃப், எச். எம் .எஸ், எம்.எல்.எப், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கைவிட கோரியும் , தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்தப்பட்ட நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பை திரும்ப பெற கோரியும், பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 200க்கும் மேற்பட்டோர் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகின்ற மூன்று குற்றவியல் திருத்த சட்டங்களை திரும்ப பெற கோரியும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களையும் கோஷங்களையும் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story