வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்
Virudhunagar King 24x7 |24 July 2024 4:50 PM GMT
நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை உதவி செயற் பொறியாளர் செபஸ்டின் பிரிட்டோ ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்களில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை உதவி செயற் பொறியாளர் திரு.செபஸ்டின் பிரிட்டோ ராஜ் (சிறப்பு திட்ட செயலாக்கத்துறையினால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரி) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி சாத்தூர், விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய உட்கோட்டங்களில் பாதிப்புக்குள்ளான அண்ணாநகர் - அரிஜன் காலனி - கரிசல்பட்டி சாலை, கன்னிசேரி - மத்தியசேனை சாலை, சங்கரலிங்கபுரம் - ஒண்டிப்புலி சாலை, கொங்கன்குளம் - திருவேங்கிடபுரம் சாலை, சமுசிகாபுரம் - வடகரை சாலை, இராஜபாளையம் - அய்யனார்கோவில் - மருங்காவூர் சாலை, கொத்தன்குளம் - சத்திரப்பட்டி சாலை, லட்சுமியாபுரம் ஒன்றிய எல்கை சாலை, கரிசல்பட்டி - தும்மையாபுரம் சாலை, சுந்தரபாண்டியம் - கோட்டையூர் ஆகிய சாலைகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் தடுப்புச்சுவர் பணிகள் மற்றும் பாலப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரி/ உதவி செயற் பொறியாளர் திரு.செபஸ்டின் பிரிட்டோ ராஜ்; அவர்கள் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களில் ரூ.54.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நிரந்திர மற்றும் தற்காலிக வெள்ள பாதிப்பு மறுசீரமைப்பு பணிகளை திட்டமிட்டவாறு விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுத்தினார். இந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் திருமதி பாக்கியலட்சுமி மற்றும் அனைத்து உதவிக் கோட்டப் பொறியாளார்கள், உதவிப் பொறியாளர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். மேற்கண்ட ஆய்வில் சிறப்பு செயலாக்கத்துறையினால் நியமிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட அறிவுரைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Next Story