திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். -
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பாலையினை பார்வையிட்டு நாற்பாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது. குறித்தும், தற்போது அதனுடைய நிலை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சி, உள்ளூர்பட்டி கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை பயனாளிக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து, முள்ளிக்குளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில், புதிய குளம் அமைக்கப்பட்டுவரும் பணிகளையும், மல்லிபுதூர் ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், புதிய நூலக கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சாரதா வித்யாலயா ஆரம்பப்பள்ளியில் கட்டடத்தின் தரம் மற்றும் மதிய உணாவின் தரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.
Next Story