விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் விழுப்புரம் மகளிர் பள்ளி
Villuppuram King 24x7 |25 July 2024 1:12 AM GMT
பள்ளி தலைமை ஆசிரியர் பெருமிதம்
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா கூறுகையில், இப்பள்ளியில், 7 ஆயிரம் மாணவிகள் பயில்கின்றனர்.இங்கு முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவிகள், சிறப்பாக கல்வி பயில்வதுடன், விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை மாலாராணி, சீனியர் உடற்கல்வி இயக்குநர்கள் கோமதி, அனுராதா, உடற்கல்வி ஆசிரியர்கள் போர்சியா, ரவி, சுகாசினி, லதா ஆகியோர் மேற்பார்வையில் மாணவிகளுக்கு தொடர் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இப்பள்ளியின் பிளஸ்2 மாணவி சங்கீதா. இவர், மல்லர்கம்ப விளையாட்டில், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ளார்.இதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கைப்பந்து, கூடைப் பந்து, எறி பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், பூப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்றுள்ளனர்.மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 8 மாணவிகளும், டேக்வாண்டா போட்டி, மல்லர்கம்பம், ஜிம்னாஸ்டிக், யோகா போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.கராத்தே போட்டியில் மாநில அளவில் தங்க பதக்கம், தேசிய அளவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர். மாநில அளவிலான 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய தடகளப் போட்டிகளில், இப்பள்ளி மாணவிகள் பங்கேற்றுள்ளனர். பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
Next Story