மணவாளன்கரை சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
Pudukkottai King 24x7 |25 July 2024 3:22 AM GMT
பொது பிரச்சனைகள்
திருமயம் ஊராட்சியை சேர்ந்தது மணவாளன்கரை கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு பள்ளியில் இருந்து வடக்கே இளஞ்சாவூர் மாரியம்மன் கோயில் வரையுள்ள 2 கிலோமீட்டர் துார தார்ச்சாலை சிதிலமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கின்றி உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சைக்கிளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story