அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மூடக்கோரி சாலை மறியல்

அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மூடக்கோரி சாலை மறியல்
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கேகே.பட்டியிலுள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 37 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.கறம்பக்குடி அருகேயுள்ள பந்துவாக்கோட்டை ஊராட்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது, கேகே பட்டியில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாம். இதைக் காரணம் காட்டி பந்துவாக்கோட்டை நெல்கொள்முதல் நிலையத்தை மூடுவதற்கு அதிகாரிகள் முயற்சிக்கின்றனராம். இந்நிலையில், பந்துவாக்கோட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மூடும் முடிவை கைவிடுவதோடு, கேகேபட்டியில் திறக்கப்பட்டுள்ள நெல்கொள்முதல் நிலையத்தை மூட வலியுறுத்தி பந்துவாக்கோட்டை பகுதி விவசாயிகள் மருதன்கோன்விடுதி 4 சாலைப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அங்கு சென்ற ரெகுநாதபுரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 37 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், பட்டுக்கோட்டை-திருச்சி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Next Story