கணினி அறிவியல் துறை மன்றம் சார்பில் பயிற்சி பட்டறை

கணினி அறிவியல் துறை மன்றம் சார்பில்   பயிற்சி பட்டறை
கணினி அறிவியல் துறை மன்றம் சார்பில் பயிற்சி பட்டறை
வையப்பமலை கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மன்றம் (ASTOUND CLUSTERS) சார்பில், Hardware Troubleshooting & Maintenance பற்றிய செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி பட்டறை கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் P.செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் K. பழனியப்பன்,செயலாளர் V கவிதா செந்தில்குமார், முதல்வர் முனைவர். R. விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இராசிபுரம் Greentech CADD மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜா மற்றும் வன்பொருள் பயிற்சியாளர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்றாமாண்டு மாணவி செல்வி. காவியாஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி தாளாளர் திரு. P. செந்தில்குமார் அவர்கள் தமது தலைமை உரையில், “கணினி அறிவியல் மாணாக்கர்கள் வன்பொருள் கணினி பாகங்கள் மற்றும் செயல்படும் விதம் பற்றி பயில வேண்டியது அவசியம்”” என்று கூறினார். கல்லூரியின் முதல்வர் முனைவர். R. விஜயகுமார் வாழ்த்தி பேசும் போது, “இன்றைய சூழலில் Software துறை மட்டுமல்லாது Hardware துறையிலும் கணினி அறிவியல் துறை மாணாக்கர்கள் சாதனைகளை புரிவது அவசியமானது என்று கூறி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் செந்தில்ராஜா அவர்கள் இன்றைய சூழலில் வன்பொருள் தொழில்நுட்பத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி எடுத்து கூறினார். சிறப்பு விருந்தினர் தங்கதுரை அவர்கள் வன்பொருள் பாகங்களை பற்றி விளக்கி கணினி செயல்படும் முறை பற்றி செய்து காண்பித்தனர். மாணாக்கர்கள் தங்களது ஐயங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முதலாமாண்டு மாணவி சுவீதா நன்றி கூறினார்.
Next Story