உப்பாத்து ஓடை குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி:

உப்பாத்து ஓடை குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி:
தூத்துக்குடி உப்பாத்து ஓடை குறுக்கே ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  குமார் ஜெயந்த் ஆய்வு செய்தார். 
தூத்துக்குடி உப்பாத்து ஓடை குறுக்கே ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  குமார் ஜெயந்த் ஆய்வு செய்தார்.  தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட காலாங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் (உப்பாத்து ஓடை) குறுக்கே நெடுஞ்சாலைத்துறை - நபார்டு மற்றும் கிராம வங்கியின் மூலம் ரூ.14.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை இன்று (24.07.2024) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி,  தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு  ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story