கந்திலி பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வன் முகாமில் ஆட்சியர் பங்கேற்பு!
Tirupathur King 24x7 |25 July 2024 8:10 AM GMT
கெஜநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்!
திருப்பத்தூர் மாவட்டம் கெஜநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று சிறப்புரையாற்றினார் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மூகாம்மில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டார். இந்த முகாமில், நரியனேரி மாணவள்ளி, இலக்கினைக்கண்பட்டி , பெரியகண்ணால பட்டி நர்சம்பட்டி, கிழக்குபதனவாடி உள்ளிட்ட கிராம மக்களுக்கு கலந்து கொண்டனர் இந்த முகாமில் மின் இணைப்பு, பட்டமாறுதல், பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை விதவை சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு உணவு மற்றும் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட15 துறைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமும் மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story