திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்பாட்டம்
Tirupathur King 24x7 |25 July 2024 8:52 AM GMT
உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை
திருப்பத்தூர் மாவட்டம் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாவட்ட கழக அவை தலைவர் கண்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வையும், ரேஷன் அத்தியாவசிய பொருட்கள் கடந்த சில மாதங்களாக கிடைக்காததாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும் மேலும் திமுக அரசை கண்டித்தும் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ராஜசந்திரசேகர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன உரையாற்றினார். அப்போது உண்மை தலைவன் கேப்டன் விஜயகாந்த் அவர்களை நடிகர் வடிவேலு தண்ணீரில் மிதப்பவர் கேப்டன் என அவதூறாக பேசினார் அவரை அப்போதைய திமுகவினர் கண்டித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் கண்டிக்கத்த தவர விட்டது ஆனால் கருணாநிதி பற்றி அவதூராக சாட்டை முருகன் பாடிய பாடலுக்கு மட்டும் திமுகவினர் சீமானை கண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? எனவும் கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட கழக செயலாளர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட கழக துணை செயலாளர் சரவணன், மற்றும் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story