எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உடல், மனநல விழிப்புணர்வு நிகழ்வு
Sholavandan King 24x7 |25 July 2024 11:16 AM GMT
குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை சூழல், சுற்றுச்சூழல், சுய பரிசோதனை, நோயற்ற வாழ்வு ஆகியவை குறித்து விளக்கம்
உடல் மனநல விழிப்புணர்வு மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உடல், மனநல விழிப்புணர்வு நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். புன்னகை பூக்கள் அறிவுசார் குறைவுடைய பள்ளி இயக்குனர் டாக்டர் பால குருசாமி உடல், மனநலம் பற்றி உரை நிகழ்த்தினார். மேலும் குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை சூழல், சுற்றுச்சூழல், சுய பரிசோதனை, நோயற்ற வாழ்வு ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார். ஐஸ்வர்யம் டிரஸ்ட் சார்பாக பள்ளிக்கு பீரோ வழங்கப்பட்டது. ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை மனோன்மணி, அனுசியா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story