ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு..

ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் மாறுதலை கைவிடக் கோரி புதன்கிழமை ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை அனுமதி மறுத்ததால் உரிய அனுமதி பெற்று சில நாட்களுக்குள் நடைபெறும் என அதன் கூட்டமைப்பு நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் மாறுதலை கைவிடக் கோரி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் ராசிபுரம் வாழ் மக்கள், சேவை அமைப்புகள், வியாபார வணிகப் பெருமக்கள், சமுதாய அமைப்புகள், மற்றும் ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனுக்கள் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும் என ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் அதிமுக பாலசுப்பிரமணியம், மதிமுக ஜோதிபாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி அர்ஜுன், பாமக பாலசுப்பிரமணியம், தேமுதிக இளையராஜா, கம்யூனிஸ்ட் மணிமாறன், உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கம் மாதேஸ்வரன், நாம் தமிழர் கட்சி தனசேகர், எஸ் டி பி ஐ நாசர், உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்க உள்ளனர்.
Next Story