பெருங்காமநல்லூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Sholavandan King 24x7 |25 July 2024 3:46 PM GMT
1000 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பேரையூர் வட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்காமநல்லூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பெருங்காமநல்லூர் காளப்பண்பட்டி அதிகாரிப்பட்டி பெரியகட்டளை செம்பரளி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி உள்ளிட்டோர் தலைமையிலும், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயச்சந்திரன், பேரையூர் வட்டாட்சியர் செல்லபாண்டியன் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆசிக், ராஜா,உதவி பொறியாளர்கள் கண்ணன், பழனிவேல், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, மருத்துவ துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 29 அரசுத்துறைகள் இம்முகாமில் தனித்தனியே அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. பெருங்காமநல்லூர் காளப்பண்பட்டி அதிகாரிப்பட்டி பெரியகட்டளை செம்பரளி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர். தரப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Next Story