கண்துடைப்புக்காக நடத்தப்படும் மக்களுடன் முதல்வர் முகாம் என பொதுமக்கள் குற்றசாட்டு

கண்துடைப்புக்காக நடத்தப்படும் மக்களுடன் முதல்வர் முகாம் என பொதுமக்கள் குற்றசாட்டு
முகாம்
தமிழக அரசின் உத்தரவைக்கிணங்க அரக்கோணம் ஊராட்சியில் கண்துடைப்புக்காக நடத்தப்படும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மக்கள் குற்றச்சாட்டு.. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழு ஊராட்சிகளில் இன்று இரண்டாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அரக்கோணம் ஊராட்சி சார்பில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் வடமாம்பாக்கம், கைனுர், உளியம்பாக்கம், இச்சிபுத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பொதுமக்களுக்கு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் குறைந்த அளவிலே மக்கள் மனுக்களை அளித்ததாக கூறப்படுகிறது மேலும் சில துறைகள் இம்முகாமில் கலந்து கொள்ளாததால் மனு அளிப்பவர்களை நேரடியாக அந்தந்த அலுவலகத்திற்கு சென்று மனுக்களை சமர்ப்பிக்குமாறு அங்கே இருந்த அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது தமிழக அரசின் உத்தரவின் பேரில் கண்துடைப்புக்காக நடத்தப்படும் இது போன்ற முகாம்கள் மக்களுக்கு எவ்வித பலனும் அளிக்காது என மக்கள் குற்றசாட்டு தெரிவிக்கின்றனர்..
Next Story