வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
Sivagangai King 24x7 |25 July 2024 4:33 PM GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் ஆய்வு செய்தாா்.
மானாமதுரை அருகே மேலநெட்டூா் கிராமத்தில் மண்ணுயிா் காத்து மண்ணுரம் காப்போம் திட்டத்தில் தக்கைப்பூண்டு விதைக்கப்பட்ட வயலை பாா்வையிட்ட ஆட்சியா், பசுந்தாள் உரப்பயிா் உபயோகம் குறித்து வேளாண் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதைத்தொடா்ந்து, மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் கடன் பெற்று அமைக்கப்பட்ட எண்ணெய் மரச்செக்கு, தமிழ்நாடு பாசன வேளாண்மை புத்தாக்கத் திட்டத்தின் கீழ் வைகை உப வடிநிலம் திட்டத்தில் வழங்கப்பட்ட மண்புழு உர உற்பத்தி அமைப்பு ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா். வேளாண் துறை இணை இயக்குநா் லட்சுமி பிரபா, வேளாண்மை உதவி இயக்குநா் ரவிசங்கா், துணை இயக்குநா்கள் சண்முக ஜெயந்தி, செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலா் சப்பாணிமுத்து, உதவி விதை அலுவலா் சுப்பிரமணியன், உதவி வேளாண் அலுவலா் சுமதி ஆகியோா் செய்தனா்.
Next Story