ராமநாதபுரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை பணம் என்னப்பட்டு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஒரு கோடியே 9 லட்சத்தி 7 அயிரத்து 89 ரூபாய் ரொக்க பணம் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஜூலை 25ஆம் தேதி இன்று திருக்கோவில் மண்டபத்தில் ராமநாதசுவாமி திருக்கோவில் இணை ஆணையர் செயல் அலுவலர் சிவராம் குமார் முன்னிலையில் பிரதான திருக்கோவில், உப கோவில் உண்டியல்கள், கோசாலை, யானை பராமரிப்பு, மற்றும் திருப்பணி உண்டியல்கள் உள்ளிட்டவற்றை திறக்கப்பட்டு உண்டியல் என்னும் பணி நடைபெற்றது கோவில் உண்டியல் என்னும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் உழவர பணி மேற்கொள்பவர்கள் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஜூலை மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக ஒரு கோடியே 9 லட்சத்து 789 ரூபாய் ரொக்க பணமும் பலமாற்று தங்கம் 50 கிராமம், பலமாற்று வெள்ளி 2 கிலோ 400 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள் 134 எண்ணம் வர பெற்றுள்ளதாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்
Next Story