பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்
அதிகாரிகளுக்கு எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவுரை
சேலம் மாநகராட்சி 35, 36-வது வார்டுக்குட்பட்ட அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி, எஸ்.கே.டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள் பலர் கான்கிரீட் சாலை, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அப்போது பொதுமக்களின் அடிப்படை தேவைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வில் மண்டலகுழு தலைவர் தனசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story