தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!
Pudukkottai King 24x7 |26 July 2024 3:45 AM GMT
போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் புஷ்பராஜ், நகரச் செயலர் பரமஜோதி, மகளிரணிச் செயலர் வெள்ளையம்மாள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிகவினர், கண்ணில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு பங்கேற்றனர். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Next Story