வேலூர் போலீஸ் நிலையத்தில் குறை தீர்க்கும் முகாம்.

வேலூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
வேலூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு பரமத்திவேலுார் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில், இன்ஸ்பெக்டர் இரங்கசாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள், வேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையிலுள்ள குடும்ப பிரச்னை, இடப்பிரச்னை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன. இதில் 46 புகார் மனுக்கள் பெறப்பட்டு அதில், 31 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள, 15 மனுக்கள் மீது உரிய விசாரணை  மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், வயதானோர் அளித்த புகார் மனு அடிப்படையில் நேரடியாக சென்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன. முகாமில் சப் இன்ஸ்பெக்டர்கள் குமார், ஜீவிதா,கோபால், சுப்பிரமணி மற்றும் போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story