மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் மதுரா செந்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்று வழங்கினார்.

பரமத்தி வேலூர் வட்டம் திடுமல் ஊராச்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் மதுரா செந்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்று வழங்கினார்.
பரமத்தி வேலூர், ஜூலை.26-  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் திடுமல் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்  நடைபெற்றது.முகாமில் குறும்பலமகாதேவி, கொத்தமங்கலம், சிறுநெல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோலிபாளையம்,  ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு  கபிலர்மலை அட்மா குழு தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினரும்,ஒன்றிய திமுகழகச் செயலாளருமான சண்முகம்  முன்னிலை வகித்தார்.   நகரமைப்பு மண்டலக்குழு உறுப்பினரும் ,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான  மதரா செந்தில் தலைமை வகித்து  விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின்னணு குடும்ப அட்டை, குடிநீர் இணைப்பு வசதி, வேளாண்மை துறை சார்பில் விவசாய கடன், பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் வங்கி கடன், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வங்கி கடன், தொழில் கடன், பட்டா மாறுதல், பட்டா வேண்டி மனு, நில அளவை செய்தல், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, வாரிசு சான்றிதழ் ,முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கேட்டு மனு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய துறை அலுவலர்களிடம் கொடுத்து அந்த மனுக்கள் குறித்து கணினியில் ஏற்றப்பட்டது . அதைத் தொடர்ந்து தீர்வு காணும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் வட்டாட்சியர் முத்துக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ராஜேந்திர பிரசாத், மலர்விழி, திடுமல் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் மற்றும் ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய் ஆய்வாளர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர்  , காவல்துறையினர், மின்வாரிய துறையினர்,  தீயணைப்பு துறையினர்  உட்பட்ட 15  துறைகளை சேர்ந்த அதிகாரிகள்,விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story