சைபர் கிரைம் தடுக்க, இன்ஜினியரிங் மாணவர்கள் போலீசாருக்கு தன்னார்வலர்களாக உதவ வேண்டும் - நாமக்கல் எஸ்பி பேச்சு.

சைபர் கிரைம் தடுக்க, இன்ஜினியரிங் மாணவர்கள் போலீசாருக்கு தன்னார்வலர்களாக உதவ வேண்டும் - நாமக்கல் எஸ்பி பேச்சு.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் நேசனல் சைபர் செக்யூரிட்டி ரிசர்ஜ் கவுன்சில் சார்பில் தேசிய சைபர் செக்யூரிட்டி உச்சிமாநாடு இரு நாட்கள் நடக்கிறது. நேற்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் மோகன் வரவேற்றார். நேசனல் சைபர் செக்யூரிட்டி ரிசர்ஜ் கவுன்சில் வைஸ் பிரசிடெண்ட் காளிராஜ் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது போலீசாரின் கடமை என்பது குற்றங்கள் நடப்பதற்கு முன்பே கண்டறிந்து தடுப்பது. நடந்த குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களை பாதுகாப்பது என்பதுதான். இன்று குற்றங்களை செய்கிறோம் என்பதே தெரியாமல் குற்றங்களை பொதுமக்கள் செய்து வருகிறார்கள். இந்திய மோட்டார் வாகன சட்டப்படி 95 சதவீத பொதுமக்கள் முறையாக சாலைவிதிகளை பின்பற்றுவதில்லை. இன்று சைபர் கிரைம் என்பது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. சைபர் ஸ்கேம், சைபர் ஹராஸ்மெண்ட், ஃப்ஷ்சிங், நிதி மோசடி, செக்சுவல் அப்யூஸ் என சைபர் கிரைம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு மாவட்டம் தோறும் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேசன்களை தொடங்கியுள்ளது. தற்போது இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் தொழில்நுட்ப மாணவர்கள் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் உதவலாம், பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2021 ம் ஆண்டில் இருந்து 2024 ம் ஆண்டு வரை மொத்தம் 3010 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டு இவற்றில் எஃஐஆர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சுமாராக 8 கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. இதில் 1 கோடி மீட்கப்பட்டுள்ளது, 3 கோடி அளவிற்கான தொகை முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் செல்போன்களுக்கு வரும் தங்களுக்கு தொடர்பு இல்லாத போன் கால்களை தவிர்க்க வேண்டும். அதேபோல் சோஷியல் வெப்சைட்டுகள், வாட்சாப் ஆகியவற்றில் வரும் தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்யக் கூடாது. அதிக வட்டிக்கு முதலீடு என வரும் தகவல்களை கண்டு பொதுமக்கள் ஏமாறக் கூடாது. தற்போதைய சூழலில் சைபர் கிரைம்கள் விதம் விதமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஒவ்வொருவரும் சைபர் வாரியர்களாக மாறவேண்டும். இன் ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் இண்டர்ன்ஷிப்பிற்காக சைபர் கிரைம் டிவிசனுக்கு வரலாம். அவர்களுக்கு சார்டிபிகேட் வழங்கப்படும். எனத் தெரிவித்தார்.
Next Story