ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிரிப்பு தெரிவித்து பேருந்து நிலைய மீட்பு குழுவினர் ராசிபுரம் நகராட்சி ஆணையாளரிடம் மனு...

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிரிப்பு தெரிவித்து பேருந்து நிலைய மீட்பு குழுவினர் ராசிபுரம் நகராட்சி ஆணையாளரிடம் மனு...
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எதிரிப்பு தெரிவித்து பேருந்து நிலைய மீட்பு குழுவினர் ராசிபுரம் நகராட்சி ஆணையாளரிடம் மனு... மனு வழங்க வந்த கூட்டமைப்பினரிடம் திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தற்போது செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நகராட்சி மன்ற கூட்டத்தில் புதிய பேருந்து அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்சியினர், அமைப்பினர், வியாபார சங்கத்தினர் என பலர் மனு அளித்தனர். இந்த நிலையில் இன்று நகர பேருந்து நிலைய மீட்பு குழுவினர் சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி விண்ணப்பத்துடன் ஊர்வலமாக 250.க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். ஊர்வலமானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி கடைவீதி, சேலம்சாலை, நாமக்கல் சாலை உள்ளிட்ட சாலைகளின் வழியாக சென்று இறுதியாக நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தனர். ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு சேகர்)அவர்களிடம் மனு வழங்கி தீர்மானத்தை ரத்து செய்ய கோரி கோசம் எழுப்பினர். அலுவலகத்திற்கு வந்த மீட்பு குழுவினரிடம் திமுக கவுன்சிலர்கள் தங்களை ஏன் தரை குறைவாக பேசி கோஷங்கள் எழுப்பினர்கள் எனக்கேட்டு நகர பேருந்து மீட்புக் குழுவினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தில் உள்ளே புகுந்தால் பதட்டமான சூழல் நிலை காணப்பட்டதால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் நகராட்சி அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
Next Story